குளத்து மீன் குழம்பு செய்முறை | Pond fish curry recipe ! இதை மறுநாள் வைத்து சாப்பிட்டால் சுவையோ தனி...
#Cooking
#Fish
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- குளத்து மீன் – ஐந்து துண்டு
- எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
- கடுகு – அரை டீஸ்பூன்
- சீரகம் – கால் டீஸ்பூன்
- வெந்தயம் – கால் டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பில்லை – சிறிதளவு
- புளி கரைச்சல் – கால் கப்
- மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
- விழுதாக அரைக்க:
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – இரண்டு
- பூண்டு – ஐந்து பால்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பில்லை – சிறிதளவு
- பச்சை மிளகாய் – இரண்டு
செய்முறை :
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- பிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.
- புளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர், மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.